எமது பணி

ISTRM மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

    • CTUR இற்குரிய சட்டவாக்கம் தொடர்பாக, பகிரங்க ஆலோசனை நடாத்தி, உரிய கருத்துகளையும் முன்மொழிவுகளையும் பெறுதல்.
    • வடக்கு-கிழக்கு மோதல்கள் தொடர்பாக, அரசாங்கத்தால் ஏற்கனவே தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அத்துடன்/அல்லது பொறிமுறைகளின் அறிக்கைகளில் காணப்படும் இடைவெளிகளை அடையாளங்கண்டு, முன்மொழியப்படும் CTUR ஆல் நடைமுறைப்படுத்தத்தக்க விடயங்கள் பற்றிய பகுப்பாய்வு.
    • முன்மொழியப்படும் CTUR இற்கான கற்றுக்கொண்ட பாடங்களும் சிறந்த நடைமுறைகளும் பற்றிய அறிக்கையைத் தயாரிப்பதற்குரிய மற்றைய சட்டவாக்கங்களையும், மற்றைய நியாயாதிக்கங்களின் அறிக்கைகளையும் ஆராய்தல்..
    • இலங்கையில் உண்மையைத் தேடும் பொறிமுறையின் அவசியம் குறித்து முறைசார்ந்த மற்றும் அரச சார்பான விளக்கக் கூற்றொன்றை உருவாக்குதல்.
    • முன்மொழியப்படும் CTUR இற்கான ஆணையை நடைமுறைப்படுத்துவதைக் கருத்திற்கொண்டு, செயன்முறைகளினதும் வழிகாட்டல்களினதும் வரைபுகளை ஆக்குதல்.
    • முன்மொழியப்படும் CTUR இற்கான பங்குதாரர்களின் ஒருமித்த கருத்தைக் கட்டியெழுப்புவதில் ஈடுபடுதல்.
    • தொழில்நுட்ப நிபுணத்துவம், உதவி ஆகியவற்றுக்காக சர்வதேச, உள்ளூர் பங்காண்மையாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுதல்.
    • பொதுமக்களை அறிவூட்டுவதற்கான விடயங்களை உருவாக்குதல் அத்துடன்/அல்லது ஊடகப் பிரசாரங்களை மேற்கொள்ளுதல்.
    • முன்மொழியப்படும் CTUR தாபிக்கப்பட்டதும், வலுவானதொரு சம்பவ முகாமைத்துவ முறைமையை உருவாக்கிப் பேணுதலும், சம்பவப் பதிவுகளைப் பின்தொடர்தலும்.