உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்திற்கு (ISTRM) வரவேற்கிறோம்!
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் நோக்கமானது, 1983 இற்கும் 2009 இற்கும் இடைப்பட்ட காலத்தில் அல்லது அதற்கு
பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடந்த மோதல்களினால் இலங்கையின் எப்பிரதேசத்திலேனும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அர்த்தமுள்ள நிவாரணத்தை வழங்குவதற்கும், நிச்சயமற்ற உணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும்
பங்களிக்கக்கூடிய உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான சுயாதீன ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கான வெளிப்படையான ஆலோசனையையும் ஆக்கபூர்வமான சூழலையும் எளிதாக்குவதாகும்.

உண்மைக்கும் நல்லிணக்கப்
பொறிமுறைக்குமான ஓர்
ஆணைக்குழு ஏன் தேவை?
truth1
truth2
unity1
unity2
reconciliation3
reconciliation1
மோதலின் விளைவுகள், உயிரிழப்பிற்கும் சொத்திழப்பிற்கும் அப்பால் செல்வதோடு, நீண்டகால அதிர்ச்சியை உள்ளடக்கும் அனுபவங்களையும் ஏற்படுத்துகின்றன.
தனியானதோர் உண்மை என்று ஒன்று இல்லை; மாறாக, தீங்கு பல கசப்பான அனுபவங்களை ஏற்படுத்துகிறது என்பது தெளிவானது. அதனால், இது தொடர்பான தேவைகள், எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த தனிநபர்களினதும் அனுபவங்களுக்குச் சாட்சியமாகச் செயற்படும் ஒரு தளமாக ஆணைக்குழு இருக்க வேண்டும் என்பதற்கான வலுவான அழைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. (CTF இன் இறுதி அறிக்கை, 2016)
நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணி 2016ஆம் ஆண்டு அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட சமூகங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான சமர்ப்பிப்புகள் நல்லிணக்கச் செயல்முறையின் ஒரு முக்கிய அங்கமாக உண்மையைச் சொல்லும் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை முன்மொழிந்துள்ளன.