• ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுப்பதும், அவர்களுக்காக முன்னிற்பதும்.
  • கண்ணுக்குத் தெரியாத வன்முறைகளை ஒப்புக்கொள்வது (நீதியின் முதல் படி).
  • பரிந்துரைகள் நீதிக்கான சாத்தியத்தை வழங்குகின்றன.
  • உதவிகள், சமூகங்களிடையே அனுதாபத்தையும், புரிதலையும் உருவாக்குகின்றன.
  • அமைதியான கலாச்சாரமானது, நல்லிணக்கத்திற்கும், சமத்துவத்திற்குமான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி, மிகவும் திறந்த, வெளிப்படையான சூழலை உருவாக்க முடியும்.
  • மீண்டும் நடக்காதிருப்பதற்கு பரிந்துரைகளை வழங்குதல்.

மோதலின் தாக்கமானது, கண்ணுக்கு புலப்படாத, அதிர்ச்சிகரமான அனுபவங்களை உள்ளடக்கி, உயிர் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட அழிவுக்கு அப்பாலும் செல்கின்றது. இந்த பாதிப்புகள், ஆழமாக பதிந்துள்ள, நீண்ட காலம் நீடித்திருக்கக்கூடியவையாகும். பாதிக்கப்பட்டவர்கள் மௌனமாக்கப்பட்டு, அவர்களின் குறைகள் கவனிக்கப்படாது விடப்பட்டால், அது எமது சமூகங்களிடையே நீண்டகால வடுக்களை விட்டுச்சென்று, நம்பிக்கையற்ற, ஐக்கியமற்ற எதிர்காலத்தை உருவாக்கும்.

அமைதியான மற்றும் சமத்துவமான அபிவிருத்திக்கான நீண்டகாலத் தீர்வைப்பெற, உண்மையைப் பேசுவதற்கும், உண்மையைத் தேடுவதற்குமான சூழலொன்றை உருவாக்குவதன் தேவையை உணர்த்துகின்றது. ஆகவே, வன்முறைகளை ஒப்புக்கொள்வதற்கும், நீதியை வழங்குவதற்கும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கான தேசிய முயற்சியொன்று முக்கியமானதாகும். இலங்கை அரசாங்கம், ஏற்கனவே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP), இழப்பீட்டுக்கான அலுவலகம் (OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) ஆகியவற்றை தாபித்துள்ளது. மேலுள்ள அலுவலகங்களை தாபித்தலானது, கடந்த கால வன்முறைகளுக்குத் தீர்வு காண்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிவொன்றை வழங்குவது மற்றும் பலமான எதிர்காலமொன்றைக் கட்டியெழுப்புவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கின்ற பரந்துபட்ட நல்லிணக்க கட்டுக்கோப்பின் பகுதியொன்றாகும்.

உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு, பாராளுமன்ற சட்டமொன்றினூடாக சுயாதீன ஆணைக்குழுவொன்றாக தாபிக்கப்படும்.

ஆணைக்குழுவின் சட்ட மற்றும் கொள்கைக் கட்டுக்கோப்பை உள்ளடக்கிய வரைவுச் சட்டமூலம் வர்த்தமானியில் (இணைப்பு) வெளியிடப்பட்டுள்ளதுடன், அக்கறைதாரர்களின் கருத்துக்களுக்கும், அவதானிப்புகளுக்குமாக திறந்திருக்கின்றது. அக்கறைதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் அவதானிப்புகளை உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) பரிசீலித்து, வரைவுச் சட்டமூலத்திற்கு மாற்றங்கள் தேவைப்படுமிடத்து பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையின் பேரில் சனாதிபதியால் நியமிக்கப்படுவர்.

அதிகாரங்களும், பணிகளும் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன;

  • சமாதானத்தை, நல்லிணக்கத்தை மற்றும் மோதல்கள் மீள நிகழாதிருப்பதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்தல்.
  • ஏனைய அமைப்புகளின் (முன்னைய ஆணைக்குழுக்கள்). பணியிலிருந்து கற்றுக்கொள்ளுதல்.
  • வெளிநாட்டு அரசுகளின் ஒத்துழைப்பு உள்ளடங்கலாக அரச அதிகாரிகள், பொலிஸ், சமூகத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்திடமிருந்து உதவிகளைப் பெறுதல்.
  • தொடர்புடைய சட்ட அமுலாக்க அல்லது வழக்குத் தொடரும் அதிகாரிகளுக்கு விடயங்களைப் அனுப்புதல்.
  • ஆணைக்குழுவின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு ஆட்கள் அல்லது நிறுவனங்களுடன் [காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP), இழப்பீட்டுக்கான அலுவலகம் (OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR)] உடன்படிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • உண்மையைத் தேடுவதற்கான எந்த ஆதாரத்தையும் ஏற்றுக்கொள்ளுதல், இனங்காணப்பட்ட இடங்களை ஆய்வு செய்தல் மற்றும் பரிசோதித்தல், எந்தவொரு நபரிடமிருந்தும் இரகசியமாக தகவல்களைப் பெறுதல்.
  • மூடிய / பொது அமர்வுகளை நடத்துதல்.

பாராளுமன்ற சட்டமொன்றினால் தாபிக்கப்பட்டது: இந்த உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவானது (CTUR), அரசாங்கங்கள் மாறினாலும் அதன் பணிப்ணையைத் தொடர்ந்து முன்னெடுக்கக்கூடியவாறு சட்டத்தால் தாபிக்கப்பட்ட சுயாதீன நிறுவனமொன்றாக விளங்கும்.

பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டது : இந்த உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவானது (CTUR), அதன் பணிப்பாணையை பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட முறையில் செயற்படுத்தும் என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது மற்றும் எதிர்காலத்தில் மோதல்கள் மீண்டும் ஏற்படாது தடுப்பது பற்றிய பரிந்துரைகளை வழங்குதல்.

முன்னைய ஆணைக்குழுக்கள் மூலமான பரிந்துரைகள்: இந்த உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவானது (CTUR), முன்னைய ஆணைக்குழுக்கள் மேற்கொண்ட பரிந்துரைகளை பரிசீலித்து அவற்றை செயற்படுத்துவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.

ஏனைய முக்கிய அம்சங்கள்: இந்த உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவால் (CTUR), மேற்கொள்ளப்படும் பரிந்துரைகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவால் வழிநடத்தப்படும்.மேலும், இந்த உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவால் (CTUR) மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் செயற்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கு கண்காணிப்புக் குழுவொன்று உருவாக்கப்படும். இந்த உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் (CTUR) பரிந்துரைகள் சனாதிபதி ஊடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, வெளியிடப்படும்.